விருதுநகர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் இன்று மாலை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. கோடை மழையினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக இன்று முதல் வருகிற 11ம் தேதி வரை தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை பெய்த திடீர் கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வர காலமாக கடும் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. பல்வேறு நகரங்களில் சதத்தையும் தாண்டி கடுமையான வெப்பம் வாட்டி வதைத்தது.
மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில்மாலை திடீரென்று மேகக் கூட்டங்கள் திரண்டு மழை பெய்தது.
விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாண்டியன் நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சூலக்கரை,லட்சுமி நகர் போன்ற பகுதிகளில் மழை பெய்தது. அதேபோல் அருப்புக்கோட்டை, காந்திநகர் ஆத்திபட்டி அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் திடீரென்று பலத்த காற்றுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
இதனால் கடும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியது.மாலை பெய்த திடீர் மழையினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.