Home /News /local-news /

மத்திய அரசின் உதவித்தொகை பெற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் உதவித்தொகை பெற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

பள்ளி தேர்வு

பள்ளி தேர்வு

கல்வி உதவித்தொகை பெற தகுதியான மாணவ, மாணவிகள் escholarship.gov.in என்ற இணையதள முகவரியில் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆதிதிராவிடர் மற்றும் பிற மதத்திற்கு மாறிய ஆதிதிராவிட மாணவ,மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    உதவித்தொகை பெற அழைப்பு:-

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிட மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு 2021- 22 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசு சார்பில் மேற்படிப்பு மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது.

    வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி கடைசி நாள்:-

    இந்நிலையில், கல்வி உதவித்தொகை பெற தகுதியான மாணவ, மாணவிகள் escholarship.gov.in என்ற இணையதள முகவரியில் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தகவலுக்கு, மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Vijay R
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி