வரும் 24-ஆம் தேதி
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு திட்டம் சார்ந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
மின் இணைப்பு சிறப்பு முகாம்:-
ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2013 மார்ச் 31 வரை பதிவு செய்த சாதாரண வரிசை விண்ணப்பதாரர்கள், 2013 -14-ல் பதிவு செய்த விவசாயிகளுக்கு சுய நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் பத்தாயிரம் பணம் செலுத்த, முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது.
மேலும், மேற்கண்ட விண்ணப்பதாரர்களுக்கு தயார்நிலை பதிவு செய்ய கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.சிறப்பு திட்டமாக மேற்கண்ட ஆண்டுகளில் பதிவு செய்த விவசாயிகள் விரைந்து பயன்பெறும் வகையில் தயார்நிலை பதிவு செய்தது தொடர்பான விண்ணப்பங்களை உடனடியாக உரிய மாற்றம் செய்யும் வகையில் மாவட்ட மின்வாரிய அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் வரும் 24ஆம் தேதி காலை பத்து முப்பது மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.இதில், கலந்து கொண்டு விவசாயிகள் பயன்பெறுமாறு மாவட்ட மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
செய்தியாளர்:அ.மணிகண்டன் ,
விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.