Home /local-news /

சிவகாசி: சீட்டு வழங்க மறுப்பு - சுயேட்சையாக  அதிமுக-திமுக பிரமுகர்கள் வேட்பு மனு

சிவகாசி: சீட்டு வழங்க மறுப்பு - சுயேட்சையாக  அதிமுக-திமுக பிரமுகர்கள் வேட்பு மனு

சிவகாசி

சிவகாசி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிமுக, திமுக பிரமுகர்கள் கடும் அதிருப்தியின் காரணமாக சுயேட்சையாக  வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். 

சிவகாசி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிமுக, திமுக பிரமுகர்கள் கடும் அதிருப்தியின் காரணமாக சுயேட்சையாக  வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சிவகாசி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிமுக, திமுக பிரமுகர்கள் கடும் அதிருப்தியின் காரணமாக சுயேட்சையாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    அதிமுக-திமுக பிரமுகர்கள்:-

    சிவகாசியை சேர்ந்த அதிமுக பிரமுகர் முனியசாமி அவரது மனைவி ராமலட்சுமிக்கு 33 வது வார்டில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால், உட்கட்சி பூசல் காரணமாக வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த முனியசாமியின் மனைவி 33 வது வார்டில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

    இதே வார்டில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக சந்தனமணி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    சலசலப்பு:-

    அதேபோல் , சிவகாசி மாநகராட்சியில் 34 மற்றும் 35 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் திமுக வேட்பாளரை எதிர்த்து திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வி மற்றும் அவரது மகள் லட்சுமி பிரியா ஆகிய இருவரும் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

    அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளுக்கு அதிகாரபூர்வமாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், கட்சிப் பிரமுகர்கள் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதன் காரணமாக, இரு கட்சி நிர்வாகிகளும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி