விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகர்ப்புற மற்றும் பாறைப்பட்டி, நாரணாபுரம், கிருஷ்ணன்கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான பாறைப்பட்டி, பள்ளப்பட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில், ஜக்கம்மாள் கோவில், பஸ் நிலையம், நாரணாபுரம் ரோடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், அண்ணாநகர், காரனேசன் காலனி, பழனியாண்டவர் புரம்காலனி, நேரு ரோடு, பராசக்தி காலனி, வடக்கு ரதவீதி, வேலாயுதம் ரஸ்தா, அண்ணா காலனி ,பள்ளபட்டி, லிங்கபுரம் காலனி, ராஜீவ் காந்தி நகர், கண்ணாநகர், அம்மன் நகர், காமராஜபுரம், 56 வீட்டு காலனி, ஐஸ்வர்யா நகர், அரசன் நகர், சீனிவாச நகர், பர்மா காலனி, போஸ் காலனி, முத்துராமலிங்க நகர், இந்திரா நகர், முருகன் காலனி, எம்.ஜி.ஆர். காலனி, மீனாட்சி காலனி, நாரணாபுரம் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என சிவகாசி மின் பகிர்மான செயற்பொறியாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அதேபோல் வளையப்பட்டி, குன்னூர், சொக்கம்பட்டி, லட்சுமியாபுரம், மூவரை வென்றான், எம். புதுப்பட்டி, பூவாணி, பிள்ளையார்நத்தம், கிருஷ்ணன் கோவில், அழகாபுரி, மங்களம், தொட்டியபட்டி, கொடிக்குளம், கூமாபட்டி, பிளவக்கல், கோவிலாறு அணைப்பகுதிகள், கிழவன் கோயில், நெடுங்குளம், அமச்சியார்புரம் காலனி, தாமரைக் குளம், ராமசாமியாபுரம், செவலூரணி, கான்சாபுரம், வத்ராயிருப்பு, மகாராஜபுரம், மாத்தூர், கோட்டையூர்,வ. புதுப்பட்டி, தம்பிபட்டி, அகத்தா பட்டி, துலுக்கப்பட்டி, மதுராபுரி, கல்யாணி புரம், சுந்தரபாண்டியம், இலந்தைகுளம், வலையங்குளம், மீனாட்சிபுரம், தைலாபுரம், நல்லூர் பட்டி, சீலநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை இருக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.