விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் டாரஸ் லாரி மோதியதில் ஷேர் ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் பெண்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை காமராஜர் சாலை பகுதியைச் சேர்ந்த பாக்யம்(48) லோடுமேன் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியில் உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாக்யம் தனது குடும்பத்தினர் 9 பேருடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அருப்புக்கோட்டை புறவழிச்சாலை வழியாக ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்து கொண்டிருந்த டாரஸ் லாரி எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்த விபத்தில் ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்து ஆட்டோவில் பயணம் செய்த பெண்கள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இசம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.