விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கோட்டைபட்டியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த நவநீத கிருஷ்ணன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சாத்தூர் அருகே கோட்டைப்பட்டி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் திருக்கோவில் உள்ளது. இந்த திருக்கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பின்பு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மகா யாகம் தொடங்கி தொடர்ந்து சிறப்பு யாகங்கள் நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து காலை கோவில்களுக்கு தீட்சிதர்கள் மூலம் கும்பங்களுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது.
பின்னர் கோவிலில் வீற்றிருக்கும் நவநீதகிருஷ்ணன் சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.இந்த கும்பாபிஷேகத்திற்கு கோட்டைப்பட்டி கிராம மக்கள் மற்றும் அதனை சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.