விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பூமிநாதர் கோவில் பங்குனி உற்சவ விழாவையொட்டி கோயில் தேரினை புதுப்பிக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டதும் சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமானதிருச்சுழி ஸ்ரீதிருமேனிநாதர் - துணைமாலையம்மன் சுவாமி திருக்கோயிலின் பங்குனி உற்சவ திருவிழா கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.மேலும் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த பங்குனி உற்சவ விழாவினை முன்னிட்டு சுவாமி அம்பாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.
மேலும் வருகின்ற 17 ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதனையடுத்து பங்குனி உற்சவ விழாவின் நிறைவு நிகழ்ச்சியான மகா தேரோட்ட நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இந்நிலையில் மகா தேரோட்டத்திற்கான திருத்தேரை புதுப்பிக்கும் பணிகளில் ஊழியர்கள் துரிதமாக ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்தாண்டு தேரோட்டம் நடைபெறுவதையொட்டி பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் பல ஆண்டுகளாக கோயிலுக்கெனயானை இருந்து வந்த நிலையில் தற்போது யானை இல்லாதது பக்தர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே கோயில் நிர்வாகம் மற்றும் இந்து அறநிலையத்துறை உடனடியாக கோயிலுக்கு புதிதாக யானை ஒன்றை வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.