விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் போலீசார் சார்பில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வசித்து வரும் பழங்குடியின மக்களான மலைவாழ் பளியர் இன மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது.
ராஜபாளையம் காவல்துறை சார்பில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வசித்து வரும் பழங்குடி மக்களான மலைவாழ் பளியர் இன மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காவல்துறை துணை கண்காணிப்பாளர் வி.ராமகிருஷ்ணன் தலைமையில் ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன் நிவாரண பொருட்களை மலைவாழ் பளியர் இன மக்களுக்கு வழங்கினார். தலா 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ எண்ணெய் மற்றும் ஒரு குடை போன்ற பொருட்கள் 40 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஜெயந்த் மலைவாழ் மக்கள் உண்டு உறைவிடப் பள்ளி மேலாளர் முருகேசன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். ராஜபாளையம் வடக்கு காவல் ஆய்வாளர் ராஜா, ஆய்வாளர் மகேஸ்வரி, காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.