விருதுநகர் அருகே பல ஆண்டுகளாக பேருந்து வசதி இன்றி தவித்து வருவதாக இரு கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தவிக்கும் கிராம மக்கள்:-
திருச்சுழி தொகுதிக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை தாலுகாவில் கடைசி எல்லைக் கிராமம் புரசலூர் ,பாசிக்குளம். இந்த இரு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமத்தில் முறையான சாலை வசதி இருந்தும் பல ஆண்டுகளாக பேருந்து வசதியின்றி கிராம மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.
இதனால், இரு கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் அதிகத் தொகை செலுத்தி ஆட்டோக்களில் பயணம் செய்யும் அவலம் தொடர்கதையாகி வருகிறது. அதேபோல் அரசு அறிவித்த பெண்களுக்கான இலவச பயணத்தில் பயணிக்க முடியவில்லை என கிராம பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பேருந்து வசதி ஏற்படுத்த கோரிக்கை:-
இதுகுறித்து நம்மிடம் பேசிய இக்கிராமத்தைச் சேர்ந்த ஏசம்மாள் கூறியதாவது, எங்களது கிராமத்தில் பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாததால் கிராம மக்கள் அதிக தொகை செலுத்தி வாடகை ஆட்டோ பயணிக்க வேண்டி உள்ளது. மேலும், பல முறை மாவட்ட நிர்வாகம், ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை பேருந்து வசதியை ஏற்படுத்தித் தரவில்லை. இனியாவது, மாவட்ட நிர்வாகம் உடனடியாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.