விருதுநகர் அருகே புலவர் சாபத்தினால் குக்கிராமத்தில் பல தலைமுறைகளாக மாடி வீடு கட்டாமல் ஓட்டு வீட்டிலேயே கிராம மக்கள் வசித்து வருகின்றனர். மீறி மாடி வீடு கட்டினால் உயிர்ப்பலி ஏற்படும் என்ற அச்சத்தில் கிராமத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.இது குறித்த செய்தி தொகுப்பு தற்போது பார்க்கலாம்.
மாடி வீடு இல்லாத அதிசய கிராமம்:-
திருச்சுழி ஒன்றியம் அருப்புக்கோட்டை தாலுகாக்கு உட்பட்ட மாவட்டத்தின் கடைசி எல்லை கிராமம் புரசலூர். இக்கிராமத்தில் 150க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
பல தலைமுறைகளுக்கு முன் புலவர் ஒருவர் விட்ட சாபத்தினால் கிராமத்தில் மாடி வீடு கட்டாமல் தற்போது வரை ஓட்டு வீட்டிலேயே கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் அதையும் மீறி மாடி வீடு கட்டினால் வீடு கட்டும் நபர்களின் வீடுகளில் உயிர்பலி ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் கிராம மக்கள் தற்போது வரை மாடி வீடு கட்டாமல் ஓட்டு வீட்டிலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்த நடைமுறையை முன்னோர்கள் முதல் தற்போதுள்ள இளைய தலைமுறையினர் வரை பின்பற்றி வருகின்றனர்.
புலவர் சாபம் முன்னோர்கள் கருத்து:-
இதுகுறித்து நம்மிடம் பேசிய கிராமத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ரமேஷ் கூறியதாவது, இக்கிராமத்தில் புலவர் ஒருவர் விட்ட சாபத்தால் கிராம மக்கள் யாருமே கான்கிரீட் மாடி வீடு கட்டினது கிடையாது. அதையும் மீறி கட்டினால் அவர்களின் வீடுகளில் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமத்தினர் பெரும்பாலானோர் ஓட்டு வீட்டையே மாடி வீடு போல் கட்டி அதில் வாழ்ந்து வருகின்றனர் என்றார்.
செய்தியாளர்:அ.மணிகண்டன்,
விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.