விருதுநகர் அருகே தமிழர்களின் பாரம்பரிய போர் விளையாட்டான சிலம்பம் மற்றும் வளரி வீச்சு போன்ற கலைகளில் பள்ளி சிறுவர், சிறுமியர்கள் ஆர்வமாக பயின்று வருகின்றனர்.
சிலம்பம், வளரி வீச்சு:-
கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் பெரும்பாலான பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்போன், டிவிகளில் பொழுதைப் போக்கி வரும் நிலையில் அருப்புக்கோட்டை அருகே உள்ள புல்லா நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி சிறுவர், சிறுமியர்கள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் மற்றும் வளரி வீச்சு போன்ற பல்வேறு போர் கலைகளை ஆர்வமாக பயின்று பயிற்சி பெற்று வருகின்றனர்.
மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்போம்:-
இதுகுறித்து நம்மிடம் பேசிய சிலம்பம் மாஸ்டர் பிரசாத் மற்றும் சிலம்பம் பயிலும் மாணவன் சஷ்டிகன் கூறியதாவது, கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் டிவி, செல்போன் போன்றவற்றில் பொழுதை வீணாகக் கழித்து வருகின்றனர்.
ஆனால் தங்களது கிராமத்தைச் சேர்ந்த சிறுவர் , சிறுமியர்கள் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் மற்றும் வளரி வீச்சு போன்ற பல்வேறு வீர விளையாட்டுகளை ஆர்வமாக பயின்று விளையாடி வருகின்றனர். மாவட்ட, மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கேற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்போம் என்றார்.
செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.