ஹோம் /Local News /

விருதுநகர்: நாளை (27.01.2022) முக்கிய பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

விருதுநகர்: நாளை (27.01.2022) முக்கிய பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

விருதுநகர்: நாளை (27.01.2022) முக்கிய பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

விருதுநகர்: நாளை (27.01.2022) முக்கிய பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

விருதுநகர், மல்லாங்கிணறு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை செய்யப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  விருதுநகர், மல்லாங்கிணறு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதன் காரணமாக மின் வினியோகம் பெறும் பகுதிகளான ராமமூர்த்தி ரோடு, அம்பேத்கர் தெரு, ரோசல்பட்டி ரோடு, கம்மாபட்டி, சத்யமூர்த்தி ரோடு, பாண்டியன் நகர், பட்டேல் ரோடு, ஏ.ஏ.ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி, பேராசிரியர் காலனி, சாஸ்திரி நகர், ரயில்வே பீடர் ரோடு மெயின் பஜாரில் தெப்பம் வரை, காசுக் கடை பஜார், காந்திபுரம் தெரு, அழகர்சாமி தெரு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

  அதேபோல, நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி கிழக்கு, மேற்கு, சத்திரரெட்டியபட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் எனவும் மின்வாரிய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  இதேபோன்று, மல்லாங்கிணறு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மல்லாங்கிணறு, வலையங்குளம், நந்திகுண்டு, மேல துலுக்கன்குளம், கெப்பிலிங்கம்பட்டி, அழகியநல்லூர், வரலொட்டி, வழுக்கலொட்டி, நாகம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.

  அதே போல் ஸ்ரீவில்லிபுத்தூர் துணை மின்நிலையத்தில் மின் வினியோகம் பெரும்பகுதியான படிக்காசுவைத்தான்பட்டி, வன்னியம்பட்டி, வைத்தியலிங்கபுரம், கொத்தன்குளம், ராஜபாளையம் ரோடு, கரிசல்குளம், லட்சுமியாபுரம், மம்சாபுரம், செண்பகத்தோப்பு, இடையன்குளம் ஒத்தப்பட்டி, காந்திநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் சின்னத்துரை தெரிவித்துள்ளார்.

  செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்

  Published by:Suresh V
  First published:

  Tags: Power cut, Virudhunagar