விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மற்றும் ஆலங்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மின் வினியோகம் பெறும் பகுதிகளான சேத்தூர் உபமின் நிலையத்திற்கு உட்பட்ட சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன் புத்தூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூர், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான், தளவாய்புரம், முகவூர், நல்லமங்கலம் ஆலங்குளம், ஆலங்குளம் முக்கு ரோடு,
முத்துச்சாமி புரம், கங்கர்செவல், குண்டாயிருப்பு, எதிர்கோட்டை, உப்புபட்டி, கல்லமநாயக்கர் பட்டி, கொங்கன் குளம், காக்கிவாடன் பட்டி, நதிக்குடி, மம்சாபுரம், ராமன்பட்டி, கரிசல்குளம், கொம்பன்குளம், சிவலிங்காபுரம், நரிக்குளம், அருணாச்சலபுரம், மேலாண்மறைநாடு, செல்லம்பட்டி, கோட்டைபட்டி, கொருக்கலம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.