ஹோம் /Local News /

புகையில்லா சிவகாசியை வலியுறுத்தி சைக்கிள் பேரணி.. சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தும் பெட்ரோல், டீசலை தவிர்க்க கோரிக்கை...

புகையில்லா சிவகாசியை வலியுறுத்தி சைக்கிள் பேரணி.. சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தும் பெட்ரோல், டீசலை தவிர்க்க கோரிக்கை...

X
புகையில்லா

புகையில்லா சிவகாசி வலியுறுத்தி சைக்கிள் பேரணி-மாணவ மாணவியர் ஆர்வமாக பங்கேற்பு

Virudhunagar District | விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றை பயன்படுத்துவது தவிர்க்க வலியுறுத்தி  தொண்டு நிறுவனங்கள், பெட்ரோலிய நிறுவனங்கள் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பெட்ரோல், டீசல், கேஸ் பயன்பாட்டினை தவிர்க்க வலியுறுத்தி தொண்டு நிறுவனங்கள், பெட்ரோலிய நிறுவனங்கள் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

சிவகாசியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் போன்ற எரிபொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தியும் மரம் வளர்ப்பு, சைக்கிள் உபயோகப்படுத்துவது குறித்து பொதுமக்களிடமும், வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

இப்பேரணியை இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் சிவகாசி அரிமா சங்கம், ஜேசிஐ சிவகாசி லயன்ஸ் கிளப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சைக்கிள் பேரணியில்  150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமாக கலந்து கொண்டனர். பெட்ரோல் டீசல் கேஸ் ஆகியவற்றை பயன்படுத்துவது தவிர்க்க வலியுறுத்தியும் மரம் வளர்ப்பு, மின்சார வாகனம் பயன்பாடு, சைக்கிள் உபயோகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வகையான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் மூலம் சைக்கிளில் மாணவ மாணவிகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர்.

மேலும் சைக்கிள் பேரணியில் கலந்துகொண்ட 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது, பெட்ரோல் டீசல் வாகனங்களின் புகையால் காற்றுமண்டலம் முழுவதும் மாசு அடைந்ததால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் நாளுக்கு நாள் பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே ஆரோக்கியமாக வாழ சுற்றுச்சூழலில் பாதுகாப்பாக வாழ்வதற்கு மரம் வளர்ப்பது ஒரு பொது மக்கள் அன்றாடம் சைக்கிள் பயன்பாட்டை உபயோகிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்

First published:

Tags: Environment, Sivakasi, Virudhunagar