விருதுநகர் மாவட்டம் முழுவதும் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளதால் வெப்பத்தை தணிப்பதற்கு பொதுமக்கள் இளநீர் கரும்புச்சாறு நுங்கு பதநீர் உள்ளிட்ட நீர் பானங்களை பெருமளவு நாடி வருவதால் தற்போது அதன் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதனால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் முழுவதும் அக்னி நட்சத்திரத்தின் கோரத்தாண்டவத்தை வெப்பத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் அவலம் தொடர்கிறது. இந்த வெப்பத்தை தணிப்பதற்கு ஆக பொதுமக்கள் இளநீர் மோர் பதநீர் நுங்கு கரும்புச்சாறு உள்ளிட்ட நீர் குளிர் பானங்களை பெருமளவு நாடிச் செல்வதால் இத்தொழில் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மரத்தின் நிழலில் இளநீர் கடை பதநீர் நுங்கு கரும்புச்சாறு கடைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. பொதுமக்களும் வெயிலின் வெப்பத்தை தணிப்பதற்கு ஆகவும் தாகத்தை தீர்த்துக் கொள்வதற்காக இயற்கை பானங்களான பதநீர் கரும்புச்சாறு நுங்கு உள்ளிட்டவற்றை நாடிச் செல்கின்றனர். இதனால் விற்பனை தற்போது சூடு பிடித்துள்ள தாக இத்தொழிலில் ஈடுபடும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இளநீர் பொள்ளாச்சி பகுதியில் இருந்தும் பதநீர் நுங்கு ஆகியவை சங்கரன்கோவில் பகுதியில் இருந்து விற்பனைக்காக விருதுநகர் மாவட்டத்தின் உள்ள பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. இத்தொழிலில் நல்ல வருமானம் கிடைப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அதிக விலையுடைய செயற்கை குளிர்பானங்களை விட விலை குறைந்ததாகவும் உடலுக்கு வலு சேர்க்க கூடிய குளிர்பானங்கள் இளநீர் 1 ரூ.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் பதநீர் ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. 100 ரூபாய் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது கரும்புச்சாறு 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்களும் குளிர்பானங்களை விலை குறைவாக இருப்பதால் அருந்துவதோடு பார்சலாக வீட்டுக்கு வாங்கிச் செல்கின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மருத்துவர் போஸ் கூறியதாவது, செயற்கை குளிர்பானங்களை விட இயற்கையில் கிடைக்கக்கூடிய நீர் மோர் மற்றும் இளநீர், பதநீர், நுங்கு ஆகியவை உடலுக்கு வலு சேர்க்க கூடியது. வெயிலில் வெளியே செல்லும் பொதுமக்கள் கட்டாயமாக இளநீர் அல்லது நீர்மோர் ஆதாரங்களை அருந்துவதால் வெப்பத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்றார்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.