விருதுநகர் அருகே 2 டன்
ரேஷன் அரிசி கடத்திய வந்த சரக்கு வாகனத்தை, பொதுமக்கள் சிறை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
அருப்புக்கோட்டை பாலையம்பட்டி நியாய விலை கடை அருகே வந்து கொண்டிருந்த சரக்கு வாகனத்தை, அப்பகுதி பொதுமக்கள் தடுத்து நிறுத்தி விசாரித்ததில் சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதனால், சந்தேகம் அடைந்த பொதுமக்கள் சரக்கு வாகனத்தின் பின்னால் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளை பிரித்து சோதித்ததில் அதில் நியாயவிலைக் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் அரிசி இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் நகர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த போலீசார் அரிசி மூட்டைகளுடன், சரக்கு வாகனத்தை நகரக் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.