Home /local-news /

விருதுநகர்: நகல் வாக்காளர் அடையாள அட்டை பெற வாய்ப்பு - மாவட்ட நிர்வாகம் தகவல்

விருதுநகர்: நகல் வாக்காளர் அடையாள அட்டை பெற வாய்ப்பு - மாவட்ட நிர்வாகம் தகவல்

வாக்காளர் பட்டியல்

வாக்காளர் பட்டியல்

Virudhunagar News | விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் PVC வாக்காளர் அடையாள அட்டை அச்சிடும் (Kiosk) இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

    நகல் வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்பும் நபர்கள், அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள், ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டை அச்சிடும் (Kiosk) இயந்திரத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என
    மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார்.

    நகல் வாக்காளர் அடையாள அட்டை பெற வாய்ப்பு:-

    வாக்காளர் பட்டியலில் வாக்காளராக பதிவு செய்து வாக்காளர் அட்டையினை தவற விட்ட நபர்கள், பழைய கருப்பு-வெள்ளை வாக்காளர் அடையாள அட்டைக்கு மாற்றாக வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்பும் வாக்காளர்கள் வசதிக்காக, தேர்தல் ஆணையத்தினால் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் PVC வாக்காளர் அடையாள அட்டை அச்சிடும் (Kiosk) இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

    ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்:-

    நகல் வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்பும் நபர்கள்/ அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள முகவரியான http://www.nvsp.in-ல் படிவம் E--001 வாயிலாக விண்ணப்பித்து, தங்களது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு வரப்பெற்ற குறுஞ்செய்தி மற்றும் QR குறியீடு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் தொடர்பு மையத்தில்(DCC) காண்பித்து நகல் வாக்காளர் அடையாள அட்டையினை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
    Published by:Vijay R
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி