Home /local-news /

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலின் 27,236.600 கிராம் நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றும் திட்டம் தொடக்கம்

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலின் 27,236.600 கிராம் நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றும் திட்டம் தொடக்கம்

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலின் 27,236.600 கிராம் நகைகள் தங்கக் கட்டிகளாக மாற்ற

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலின் 27,236.600 கிராம் நகைகள் தங்கக் கட்டிகளாக மாற்ற

Irukkangudi Mariyamman Temple : இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்கள் நகைகளை தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு வங்கிகளில் டெபாசிட் செய்யும் திட்டத்தின் கீழ் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலின் 27,236.600 கிராம் நகைகளை வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
    இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்கள் நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு வங்கிகளில் டெபாசிட் செய்யும் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலின் 27,236.600 கிராம் நகைகளை வங்கி அதிகாரிகளிடம் அமைச்சர்சேகர்பாபு முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.

    விருதுநகர் மாவட்டம் இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோவிலுக்கு கடந்த 10 ஆண்டுகளில் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட 27 ஆயிரத்து 236.600 கிராம் நகையை மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கி சுத்த தங்க கட்டிகளை வங்கிகளில் 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யும் திட்டம் இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோயில் வளாகத்தில் நீதியரசர் ஆர்.மாலா தலைமையில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு கோயில் நிர்வாகத்திடம் பெறப்பட்ட தங்க நகையை சாத்தூர் ஸ்டேட் வங்கி கிளை மேலாளரிடம் ஒப்படைந்தனர்.

    நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, முதலமைச்சர் உத்தரவு படி தமிழகத்தை மூன்று மண்டலங்களாக பிரித்து இந்த மண்டலங்களில் உள்ள கோயில்களில் உள்ள சாமிக்கு பயன்படாத நகைகளை மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கி சுத்த தங்கங்கங்களாக மாற்றப்படும் என்றார். இந்த தங்க கட்டிகளை வங்கிகளில் 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் என்றும் அதில் வரும் வட்டியை வைத்து அந்தந்த கோயில்களின் திருப்பணி மேற்கொள்ளப்படும் என்றார்.

    குறிப்பாக இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோயிலில் இருந்து எடுக்கப்படும் 27 ஆயிரத்து 236.600 கிராம் தங்கத்தை உருக்கி வங்கியில் டெபாசிட் செய்வதன் மூலம் ஆண்டுக்கு 24 லட்சம் வட்டியாக கிடைக்கும் என்றார். இறை சொத்து இறைவனுக்கே என்ற முறையிலும், வெளிப்படை தன்மையாக இருப்போம் என்ற தாரக மந்திரத்தை கருத்தாக கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Suresh V
    First published:

    Tags: Jewels, Minister Sekar Babu, Temple, Virudhunagar

    அடுத்த செய்தி