விருதுநகரில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வர்களுக்காக விடுமுறையிலும் செயல்படும் நூலகம்
விருதுநகரில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வர்களுக்காக விடுமுறையிலும் செயல்படும் நூலகம்
அருப்புக்கோட்டை கிளை நூலகத்தில் புதிய சலுகை-டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வர்கள் குஷி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கிளை நூலகத்தில் விடுமுறை தினங்களிலும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வர்களுக்கு பயன்பெறும் வகையில் படிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதற்கு வாசகர்கள் மற்றும் போட்டி தேர்வர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகின்றன.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கிளை நூலகத்தில் விடுமுறை தினங்களிலும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வர்களுக்கு பயன்பெறும் வகையில் படிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதற்கு வாசகர்கள் மற்றும் போட்டி தேர்வர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகின்றன.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்நூலகத்தில் வரலாறு, தமிழ் நூல்கள், இலக்கியங்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைகள் இலக்கணம் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு வகையான 15,279 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூலகத்தில் சுமார் 10 ஆயிரத்து 628 பேர் வாசகர்களாக உள்ளனர். மேலும் தினசரி 200 மேற்பட்ட வாசகர்கள் வந்து செல்கின்றன.
அதேபோல் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்கள் நூலகத்தை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். தினசரி 60 முதல் 80க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வர்கள் நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
நூலகத்தில் கிடைக்கும் புத்தகங்கள் மூலம் குறிப்பெடுத்துக் கொண்டு போட்டித் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். சிறுவர்கள் முதல் வயதான முதியவர்கள் வரை அனைவரும் வாசிப்பு பழக்க ஆர்வத்தில் நூலகத்திற்கு வந்து செல்கின்றன.
நூலகத்தில் சுமார் 5 நாளிதழ்கள் மற்றும் 95 க்கு அதிகமான பருவ இதழ்கள் நூலகத்தில் கிடைக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளில் இந்நூலகத்தில் போட்டித்தேர்வு தயாரான 12-க்கும் மேற்பட்டோர் அரசுப்பணியில் சேர்ந்துள்ளனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய நூலக வாசகர்கள் கூறியதாவது:-\"நூலகத்தில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் போட்டி தேர்வர்களுக்கு தேவையான சில அப்டேட் போட்டித் தேர்வுக்கான வினா விடை புத்தகங்கள் நூலக நிர்வாகம் ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் நெருங்கும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு படிப்பதற்காக விடுமுறையிலும் நூலகத்தில் படிக்க ஏற்பாடு செய்து கொடுத்த நூலகத்திற்கு மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது\" என்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.