Home /local-news /

விருதுநகர் : தேசிய அறிவியல் தினம் - அறிவியல் கண்காட்சியில் மாணவ மாணவிகள் ஆர்வமாக பங்கேற்பு

விருதுநகர் : தேசிய அறிவியல் தினம் - அறிவியல் கண்காட்சியில் மாணவ மாணவிகள் ஆர்வமாக பங்கேற்பு

தேசிய

தேசிய அறிவியல் தினம்-அறிவியல் கண்காட்சி மாணவ மாணவிகள் ஆர்வமாக பங்கேற்பு

Virudhungar District News | சிறந்த கண்டுபிடிப்புகளை ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் இரு பிரிவுகளாக மதிப்பிடப் பட்டன.

    விருதுநகரில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ மாணவிகளின் அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் அறிவியல் கண்காட்சி போட்டி நடைபெற்றது.இதில் மாணவ மாணவிகள் ஆர்வமாக பங்கேற்றனர்.

    விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளின் அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் அறிவியல் கண்காட்சி போட்டி நடைபெற்றது.இக்கண்காட்சியில் 78 பள்ளிகளைச் சேர்ந்த 288 மாணவ மாணவிகள் ஆர்வமாக பங்கேற்று தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினார்.

    இக்கண்காட்சியில் நடக்கும் இயந்திர ரோபோ மனிதன், தீயணைப்பு கருவி, நிலநடுக்க எச்சரிக்கை கருவி, கழிவு நீரோடைகளில் பூச்சிக்கொல்லி இல்லா கொசு ஒழிப்பு திட்டம், ட்ரோன், தானியங்கி தெரு விளக்கு, சூரிய ஒளியில் இயங்கும் மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான அறிவியல் கண்டுபிடிப்புகளை மாணவர்கள் மாணவிகள் காட்சிப்படுத்தினார்.

    இவற்றில் சிறந்த கண்டுபிடிப்புகளை ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் இரு பிரிவுகளாக மதிப்பிடப் பட்டன. இதில் சிறந்த படைப்பு உடைய மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

    மேலும் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் போட்டியில் பங்கேற்ற அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த அறிவியல் கண்காட்சி போட்டியை அரசு அருங்காட்சியக காப்பாளர் கிருஷ்ணம்மாள் ஏற்பாடு செய்திருந்தார்.

    மாணவர்களின் அறிவியல் கண்காட்சியை ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பலரும் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

    செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
    Published by:Vijay R
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி