விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மர்மமான முறையில் மூன்று மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்ய கோரி அப்பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நாருகாபுரத்தைச் சேர்ந்த ஜான்பாண்டியன் (27) இவருக்கும் நல்லான்பட்டியைச் சேர்ந்த முருகலட்சுமி (19) ஆகியஇருவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் முருகலட்சுமி 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி மாலை நாருகாபுரம் இல்லத்தில் மர்மமான முறையில் நிலையில் உயிரிழந்து கிடந்தார். இந்நிலையில் முருகலட்சுமி தீ விபத்தில் உயிரிழந்ததாக ஜான்பாண்டியன் குடும்பத்தினர் காவல் துறையினருக்கும் அந்தப் பெண் வீட்டாருக்கும் தகவல் கொடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த இருக்கன்குடி போலீசார் முருகலட்சுமியின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முருகலட்சுமி உடலை மருத்துவர்கள் பிரேத சோதனை நடத்தினார்கள். இந்த நிலையில் முருகலட்சுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது குடும்பத்தினர் உடலை வாங்க மறுந்தனர்.
இந்நிலையில், முருகலட்சுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் வரதட்சணை பிரச்சனை காரணமாகவே முருகலட்சுமியை அவரின் கணவர் குடும்பத்தார் அடித்து கொலை செய்து விட்டு உடலை தீ வைத்து எரித்து விட்டதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜான் பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி முருகலட்சுமியின் தாய் மற்றும் அண்ணன் மற்றும் உறவினர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்.
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.