Home /local-news /

சங்கரலிங்கபுரம்: மாசிமக விழா - பாத யாத்திரையை தொடங்கிய முருக பக்தர்கள்

சங்கரலிங்கபுரம்: மாசிமக விழா - பாத யாத்திரையை தொடங்கிய முருக பக்தர்கள்

மாசிமகம்

மாசிமகம் விழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முருக பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சர்ப்பக் காவடி எடுத்து பாதையாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

மாசிமகம் விழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முருக பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சர்ப்பக் காவடி எடுத்து பாதையாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

    மாசிமக விழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முருக பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சர்ப்பக் காவடி எடுத்து பாதையாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

    பாத யாத்திரையை தொடங்கிய முருக பக்தர்:-

    விருதுநகர் அருகே சங்கரலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருக பக்தர்கள் குழுவினர் மாலையணிந்து கடுமையாக விரதமிருந்து மாசிமக விழாவையொட்டி திருச்செந்தூருக்கு பாதயாத்திரை பயணத்தை சவுண்டம்மன் கோயிலிலிருந்து மேற்கொண்டனர்.

    இக்குழுவை சேர்ந்த குருசங்கர் என்ற முருக பக்தர் முதன்முதலாக 42 நாட்கள் கடுமையான விரதம் இருந்து வீட்டில் காவடியுடன் கூடிய கண்ணாடி பெட்டி தயார் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுள்ளன.

    அதன் பின்னர் , மூன்று அடி பெரிய நல்ல பாம்பு பெட்டியில் தானாக வந்து படுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.இந்த அரிய நிகழ்வை பொதுமக்கள், பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர்.

    சர்ப்பக் காவடிக்கு சிறப்பு பூஜை:-

    கண்ணாடிப் பெட்டி மூடப்பட்டு காவடிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் காட்டப்பட்டன. முருக பக்தர்கள் அரோகரா.. அரோகரா... என்ற சரண கோஷத்துடன் சர்ப்பக் காவடியை தலையில் சுமந்தபடி குரு சங்கர் பாதயாத்திரையை தொடங்கினார்.

    மேலும், ஒண்டிப்புலி நாயக்கனூர், ஓ.கோவில்பட்டிஎன பல கிராமங்களைச் சேர்ந்த முருக பக்தர்களும் திருச்செந்தூர் பாதயாத்திரையை பயணத்தை மேற்கொண்டனர்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Suresh V
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி