Home /local-news /

உள்ளாட்சி தேர்தல் : காங்கிரஸ் சார்பில் மாமியார் - மருமகள் வேட்புமனு தாக்கல்

நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில் விருதுநகர் நகராட்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட மாமியார் மற்றும் மருமகள் இருவரும் ஒரே நேரத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

    நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில் விருதுநகர் நகராட்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட மாமியார் மற்றும் மருமகள் இருவரும் ஒரே நேரத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

    மாமியார், மருமகள் வேட்புமனு தாக்கல்:-

    விருதுநகர் நகராட்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாமியார் மருமகள் இருவருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் அடுத்தடுத்த வார்டுகளில் போட்டியிடுகின்றனர்.விருதுநகர் நகராட்சி 27-வது வார்டில் மாமியார் பேபி காளிராஜ், 26-வது வார்டில் மருமகள் சித்ரேஸ்வரி போட்டியிடுகின்றனர்.

    இதுவே முதல் முறை:-

    இதில், பேபி காளிராஜ் இருமுறை வார்டு கவுன்சிலராக இருந்தவர். சித்ரேஸ்வரி முதல் முறையாக போட்டியிடுகிறார். விருதுநகர் நகர் மன்றத் தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாமியார்-மருமகள் போட்டியிடுவது இதுவே முதல் முறை ஆகும்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Vijay R
    First published:

    Tags: Local Body Election 2022, Virudhunagar

    அடுத்த செய்தி