உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருவதால் மருத்துவ படிப்பை தொடர்வதில் சிக்கல் நீடித்து வருவதாகவும், தங்களது கல்வித் திறன் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக நாடு திரும்பிய விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கவலை தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருவதால் அந்நாட்டில் மருத்துவம் படித்து வரும் இந்திய தமிழக மாணவர்களை மத்திய அரசு ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டனர்.அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்க புரத்தைச் சேர்ந்த (18 ) ஹேமந்த் குமார் உக்ரைன் உஸ்ஹரோட் நேசனல் யுனிவர்சிட்டியில் முதலாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் மாணவர் சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
இந்நிலையில் தொடர்ந்து போர் நடைபெற்று வருவதால் தற்போது மாணவர் ஹேமந்த் குமார் மருத்துவப் படிப்பிற்கான வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக பயின்று வருகிறார். அதேபோல் தமிழகம் திரும்பிய பெரும்பாலான மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக மருத்துவப் படிப்பை பயின்று வருகின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மருத்துவ மாணவர் ஹேமந்த் குமார் கூறியதாவது, "ரஷ்யா உக்ரைன் போரால் பெரும்பாலான மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். தற்போது போரால் தங்களது மருத்துவ படிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடு திரும்பிய இந்திய மாணவர்களுக்கு இந்தியாவில் மருத்துவ படிப்பு தொடர ஏற்பாடு செய்து தரப்படும் என மத்திய மாநில அரசுகள் அறிவித்தன. ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுநாள் வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதால் ஏமாற்றத்தில் இருந்து வருகிறோம்.
எனவே மத்திய மாநில அரசுகள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர் மணிகண்டன் விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.