கிராமப்புற ஏழை எளிய மாணவிகள் பயன்பெறும் வகையிலும்
சென்னை,
மதுரை உள்ளிட்ட நகரங்களில் கிடைக்கக்கூடிய அனைத்து வசதிகளுடன் கூடிய செவிலியர் இளங்கலை பட்டப்படிப்பில், மாவட்டத்திலேயே மிக குறைந்த கல்விக் கட்டணத்தில் கல்வி சேவையாற்றி வருகிறது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ரத்தினம் நர்சிங் கல்லூரி. இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பந்தல்குடி பகுதியில் அமைந்துள்ள ரத்தினம் இளங்கலை செவிலியர் கல்லூரி ஆகும். இக்கல்லூரி சென்னை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் பதிவுபெற்ற கல்லூரியாகும் விருதுநகர் மாவட்டத்திலேயே மொத்தம் உள்ள நான்கு இளங்கலை செவிலியர் கல்லூரிகளில் இக்கல்லூரியும் ஒன்றாகும். ரத்தினம் கல்வி அறக்கட்டளை மூலமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
அருப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற ஏழை எளிய மாணவிகள் பயன்பெறும் வகையிலும் சென்னை மதுரை உள்ளிட்ட நகரங்களில் செயல்படும் செவிலியர் கல்லூரிக்கு இணையாக அமைக்கப்பட்டுள்ளது இக் கல்லூரியின் சிறப்பம்சமாகும். கிராமப்புற மாணவிகளின் செவிலியர் கனவை நனவாக்கும் முயற்சியில் கல்வி சேவையாற்றி வருகிறது இக்கல்லூரி.
இக்கல்லூரியில் அனுபவமிக்க பேராசிரியர்கள் மூலமாக மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் மற்றும் முதலுதவி சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சி மற்றும் செய்முறை வகுப்புகள் கற்றுத்தரப்படுகின்றன.
மேலும் சிறந்த நூலகம் ஆய்வகம் உள்ளிட்டவை உள்ளதால் மாணவிகள் மிகவும் ஆர்வமாக பயன்படுத்தி வருகின்றனர். மாணவிகள் பயன்பெறும் வகையில் விடுதி , பேருந்து வசதி விளையாட்டு மைதானம், பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை பெற ஆங்கில பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் எம்ஆர்பி என்ற அழகிய கூடிய செவிலியர் பணி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கல்லூரியின் முதல்வர் தாமரைச்செல்வி மற்றும் கல்லூரி மாணவிகள் பாண்டிச்செல்வி கிருஷ்ணவேணி கூறியதாவது, மாவட்டத்திலேயே இளங்கலை செவிலியர் நான்காண்டு பட்டப்படிப்புக்கு இக்கல்லூரியில் அரசு நிர்ணயித்த மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அதேபோல் மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் செய்முறை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொள்வதற்காக ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாஸ் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கல்லூரியில் நடத்தப்படும் தேர்வுகள் மற்றும் கல்வி சம்பந்தமான சந்தேகங்களுக்கு பேராசிரியர்கள் விளக்கங்களைத் தருகின்றனர். எம்ஆர்பி தேர்வுக்கு தயாராவதற்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் அளிப்பதால் தங்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது என்றனர்.
இக்கல்லூரியில் 4 ஆண்டு பிஎஸ்சி நர்சிங் செவிலியர் பட்டப்படிப்பு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. எஸ்சி, எஸ்டி சிறுபான்மை மாணவ மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தில் சிறப்பு சலுகையாக ரூபாய் 45 ஆயிரம் வழங்கப்படுகிறது.
அதேபோல் கவுன்சிலிங் மூலமாக வரும் OBC,BC,MBC,DNC பிரிவை சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி மாணவிகளுக்கு ரூபாய் ரூ.20,000 சிறப்பு சலுகையாக வழங்கப்படுகிறது.அதேபோல் கல்லூரியில் மொத்தம் முதலாம் ஆண்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள சீட்டுகளின் எண்ணிக்கை 60 ஆகும். மே மாத கடைசியில் முதலாமாண்டு மாணவிகளுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.