டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலைஉயர்வால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை ரூபாய் 10 முதல் உயர் ரக மதுபானங்கள் ரூபாய் 80 வரை விற்பனை விலையை உயர்த்தி புதிய அறிவிப்புவெளியிடப்பட்டது. மேலும் விலை உயர்வுமார்ச் 7 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை ரூபாய் 10 முதல் உயர் ரக மதுபானங்கள் விலை 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக டாஸ்மார்க் கடைகளில் அறிவிப்பு பலகை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் வாங்க வந்த குடிமகன்கள் மதுபானங்களின் விலை திடீரென உயர்வால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுபானங்களின் விலை உயர்ந்தாலும் குடிமகன்கள் போட்டி போட்டு ஆர்வமாக மதுபானங்களை வாங்கி சென்றனர். மேலும் மதுபானங்கள் விலை உயர்வை உடனடியாக தமிழக அரசு குறைக்க வேண்டும் என மதுபிரியர்கள் அரசுக்குகோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு ஆன தேர்தல் செலவை சமாளிப்பதற்காக அரசு டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்தி உள்ளதாக குடிமகன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.