Home /local-news /

நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு ஆயுள் தண்டனை- போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு ஆயுள் தண்டனை- போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவருக்கு ஆயுள் தண்டனை

நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவருக்கு ஆயுள் தண்டனை

Virudhunagar District : சாத்தூர் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவர்க்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூபாய் 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கி ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சாத்தூர் அருகிலுள்ள ஒத்தையால் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் சுந்தர்ராஜ் (63) என்பவர் கடந்த 2019 ம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த 4 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சாத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சுந்தர்ராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

    அதன் பின்னர் மேற்கொண்ட புலன் விசாரணைக்குப் பின் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இவ்வழக்கு குறித்து இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் குழந்தைகள் பாலியல் தடுப்பு சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 10.06.2019 ஆம் தேதி சுந்தர்ராஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

    இந்நிலையில் குழந்தைகள் பாலியல் தடுப்பு சிறப்பு அமர்வு நீதிமன்ற நீதிபதி தனசேகரன் குற்றவாளியான சுந்தரராஜ்க்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Suresh V
    First published:

    Tags: Court, Sexual harrasment, Virudhunagar

    அடுத்த செய்தி