Home /local-news /

மகா சிவராத்திரி : விருதுநகரில் பயிறு, கிழங்கு வகைகள் கிடுகிடு விலை உயர்வு - பொதுமக்கள் கவலை

மகா சிவராத்திரி : விருதுநகரில் பயிறு, கிழங்கு வகைகள் கிடுகிடு விலை உயர்வு - பொதுமக்கள் கவலை

மகாசிவராத்திரி-பயறுகிழங்குவகைகள் கிடுகிடுவிலைஉயர்வு-பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி

மகாசிவராத்திரி-பயறுகிழங்குவகைகள் கிடுகிடுவிலைஉயர்வு-பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி

மகாசிவராத்திரி தினத்தையொட்டி பயறு வகைகள் மற்றும் சக்கரைவள்ளி கிழங்குகள் விலை கிடுகிடுவென சந்தையில் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள், பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மகாசிவராத்திரி தினத்தையொட்டி பயறு வகைகள் மற்றும் சர்க்கரைவள்ளி கிழங்குகள் விலை கிடுகிடுவென சந்தையில் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள், பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மகாசிவராத்திரி தினத்தையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான கோயில்களில் சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன. மகா சிவராத்திரி தினத்தில் பெரும்பாலான பக்தர்கள் வீடுகள் மற்றும் கோவில்களில் குல தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி பயறு வகைகள் மற்றும் கிழங்கு வகைகளை படையலிட்டு வழிபடுவது வாடிக்கையாகும்.

    இந்நிலையில் சிவராத்திரி தினத்தையொட்டி விருதுநகர் சந்தைகளில் பயறு வகைகள் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் பக்தர்கள் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கிலோ சர்க்கரை வள்ளிக்கிழங்கு ரூபாய் 30 விற்கப்பட்ட நிலையில் சிவராத்திரி தினத்தை ஒட்டி ரூபாய் 40 க்கு விற்பனையானது.

    மேலும் சந்தையில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு கொண்டைக்கடலை போன்ற பயறு வகைகளுக்கு அதிகமான டிமாண்ட் ஏற்பட்டுள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.விலை உயர்வால் பெரும்பாலான பொதுமக்கள் கணிசமான அளவை பயறு மற்றும் கிழங்குகளை வாங்கிச் சென்றனர்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Vijay R
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி