விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள கால்நடை உதவியாளர் பணிக்கான நேர்காணல் வரும் 28ஆம் தேதி முதல் மே 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார். இதனால் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் காரணமாக கால்நடை உதவியாளர் பணிக்கான நேர்காணல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் உதவியாளர் பணிக்கான நேர்காணல் தற்போது தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான நேர்காணல் அழைப்பு கடிதங்கள் அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
இதையடுத்து இப்பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் வரும் 28-ம் தேதி முதல் மே 9-ஆம் தேதி வரை மாவட்ட விளையாட்டு அரங்கில் இப்பணிக்கான நேர்காணல் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மேகநாதர் அறிவித்துள்ளார். நேர்காணல் நடைபெறும் தேதி மற்றும் அதற்குள்ளாக நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிக்கான அழைப்பானை கடிதம் கிடைக்கபெறாதவர்கள் வரும் 25 26-ஆம் தேதி விருதுநகர் மாவட்ட கால்நடை துறை மண்டல இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று தகுந்த ஆதாரங்களுடன் அலுவலக நேரத்தில் அழகி பணிக்கான அழைப்பு கடிதத்தை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.