விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வரலாற்று சிறப்புமிக்க 335-வது வெண்குடை திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. பல்வேறு கிராமிய நிகழ்ச்சிகள் வண்ணப் பதாகைகள் முழங்க வீதி உலா கொண்டு வரப்பட்டது. இதயத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தேவேந்திரகுல வேளாளர் சமூகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் தேதி வெண்குடை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். வரலாற்று சிறப்புமிக்க இந்த விழா இந்தாண்டு நடைபெற்றது. 335-வது ஆண்டு வெண்குடை திருவிழா சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு தினத்தில் இராசபாளையம் செல்லம் வடக்குத் தெரு, தெற்குத் தெரு, சீனிவாசன் புதுத்தெரு, குமரன் தெரு உள்பட தெருக்கள் வழியாக கேரள செண்டை மேளம், உருமி மேளம், ஒயிலாட்டம், ஆலி ஆட்டம், முழங்க வெண்குடை ஏந்தி மருளாடி சாமியாடி வந்தார்.
வெண் குடையை சுற்றிலும் ராஜபாளையம் டி.எஸ்.பி. ராம கிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரிநாதன் தலைமையில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து காவல் நிலையங்களில் இருந்தும் காவலர்கள் வரவழைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
முடங்கியாறு ரோடு வழியாக வட்டாட்சியர் அலுவலகம், ராஜீக்கள் கல்லூரி அருகே உள்ள பகுதியில் முகாமிட்டனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அருள்மிகு நீர் காத்த அய்யனார் கோவில் சென்று வழிபாடு நடத்தினர். வெண்கொடிதிருவிழாவையொட்டி உள்ளூர் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.