விருதுநகர் அருகே 102 வது வயதில் அடியெடுத்து வைக்கும் தாத்தா, தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார்.
102வது பிறந்த நாளை கொண்டாடிய தாத்தா:-
விருதுநகர் மாவட்டம் அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த 101 வயதான சின்னராசு - தனலட்சுமி தம்பதியர் வசித்து வருகின்றனர். வயதான மில் அதிபரான சின்னராசு 1920ஆம் ஆண்டு ஜனவரி 26 தேதி பிறந்தார். குடியரசு தினமான இன்று தனது 102 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
இவருக்கு ஒரு மகன் மற்றும் நான்கு மகள்கள் உள்ளனர். மேலும், எட்டு கொள்ளு பேத்திகள் உள்ளனர். 102 வது பிறந்த நாளான இன்று தனது கொள்ளுப்பேத்திகள் மற்றும் குடும்பத்துடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்.
கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தி விட்டு உறவினர்களுடன் ஒன்றாக அமர்ந்து குரூப் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மகன், மகள்கள், கொள்ளு பேத்திகள் என அனைவரும் அவரிடம் ஆசிர்வாதம் பெற்றனர்.
செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.