விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் செந்நெல்குடியில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். உள்ளூர் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் செந்நெல்குடியில் அருள்மிகு ஸ்ரீ வெங்கடாசலபதி கோவில் சித்திரைத் திருவிழாவை ஒட்டி கள்ளழகர் கௌசிகா ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கள்ளழகர் குதிரை வாகனம் மூலம் கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக சென்றடைந்து கௌசிக ஆற்றில் இறங்கினார்.
இந்நிகழ்வை காண உள்ளூர் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் விருதுநகர் மாவட்டம்சாத்தூரில் சித்ரா பவுர்ணமி நாளன்று கள்ளழகர் வைப்பாற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக விளங்குவது சித்ரா பௌர்ணமி நாளன்று கள்ளழகர் வைப்பாற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஆகும்.
இந்த நிகழ்ச்சிக்கு சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளக் கூடிய இந்நிகழ்ச்சியின் போது ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோவிலில் உள்ள கள்ளழகர் சிறப்பு அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில் வீதி உலா வருவார். பின்பு வைப்பாற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியானது கடந்த ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு அறிவுறுத்தலின்படி நிறுத்தப்பட்டது.
இந்தஆண்டு வைப்பாற்றில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா பௌர்ணமி நாளான இன்று நடைபெற இருந்த கள்ளழகர் வைப்பாற்றில் ஆற்றில் இறங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. சாமிக்கு ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.