Home /local-news /

விருதுநகர் : முழு ஊரடங்கால் வெறிச்சோடிய முக்கிய  சாலைகள்

விருதுநகர் : முழு ஊரடங்கால் வெறிச்சோடிய முக்கிய  சாலைகள்

விருதுநகர்:

விருதுநகர்: முழு ஊரடங்கு அமல் - வெறிச்சோடிய முக்கிய  சாலைகள்

ஞாயிற்றுக் கிழமையான இன்று முழு ஊரடங்கு என்பதால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ஞாயிற்றுக் கிழமையான இன்று முழு ஊரடங்கு என்பதால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    முழு ஊரடங்கு அமல்:-

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையிலும், ‘ஒமைக்ரான்’ சமூக பரவல் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும் தமிழக அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. அதன்படி , கடந்த 6-ந் தேதி முதல் இரவு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

    அதன்படி, இன்று மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. 1,500 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.நகர்ப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு இருக்கின்றனர்.

    கொரோனா ஊரடங்கிலும் அயராது தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணியை செவ்வனே செய்து வருகின்றனர். வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டாலும் ஆங்காங்கே இருக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    செய்தியாளர்:அ.மணிகண்டன்,
    விருதுநகர்
    Published by:Vijay R
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி