ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு என்பதால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முழு ஊரடங்கு அமல்:-
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையிலும், ‘ஒமைக்ரான்’ சமூக பரவல் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும் தமிழக அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. அதன்படி , கடந்த 6-ந் தேதி முதல் இரவு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
அதன்படி,மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. 1,500 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.நகர்ப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு இருக்கின்றனர். ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக ஆட்டோக்கள் மட்டும் இயங்கின.
செய்தியாளர்:அ.மணிகண்டன்,
விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.