ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் போர் நடந்து வரும் நிலையில் சொந்த ஊர் திரும்பிய மருத்துவ மாணவருக்கு பெற்றோர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். என்னைப் போலவே உக்ரைனில் சிக்கியுள்ள அனைத்து மாணவர்களையும் மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போரால் உக்ரைனில் தங் கிமருத்துவம் படிக்கும் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மத்திய அரசு உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.இதற்காக ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் அருப்புக்கோட்டை ஜோதிபுரத்தை சேர்ந்த கண்ணன்- உமா மகேஸ்வரி தம்பதியரின் மகன்ஹேமந்த்குமார் (18) மத்திய அரசின் முயற்சியால் ஊர் திரும்பியுள்ளார். உக்ரைன் உஸ்ஹரோட் நேசனல் யுனிவர்சிட்டியில் முதலாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் மாணவர் ஹேமந்த்குமார் மத்திய அரசின் 3-வது விமானம் மூலம் சொந்த ஊர் திரும்யுள்ளார். ஊர் திரும்பிய மாணவரை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மாணவர் ஹேமந்த்குமார் கூறியதாவது, ரஷ்யா-உக்ரைனுக்கு இடையே உள்ள எல்லைப் பகுதியான க்யூ ,கார்கியூ, இன்னும் பல நகரங்களில், சோவியத் காலத்தில் கட்டப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பதுங்கு குழியில் ஏராளமான மாணவர்கள் பதுங்கி உள்ளனர்.என்னை போலவே ஏராளமான மாணவர்கள் உக்கிரைனில் சிக்கியுள்ளனர்.என்னை மீட்ட மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி. என்னை போலவே தமிழ் மாணவர்களையும் இந்திய மாணவர்களையும் மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மேலும் ஹேமந்த்குமார் தந்தை கண்ணன் கூறியதாவது,
போர் சூழ்நிலைகளை தொலைக்காட்சியில் பார்த்தபோது அதிர்ச்சியாய் இருந்தது இன்று ஊருக்கு வந்த என் மகனை பார்த்த பின்புதான் மகிழ்ச்சியாய் உள்ளது. என் மகனை போல அனைவரையும் மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.