Home /local-news /

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியலை தயாரிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியலை தயாரிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கும், கட்டணம் செலுத்துவதற்கு மே மாதம் 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அரசு பொதுத் தேர்வு எழுதும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 பயிலும் மாணவர்களின் பட்டியலைத் தயாரிக்க பள்ளிகளுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி தேர்வுகள் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

    வரும் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு:-

    எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் விவரங்களை சேகரிக்கும் பொருட்டு, விவரங்களை ஜனவரி 19ம் தேதிக்குள் ஆன்லைனில் தெரிவிக்குமாறு ஏற்கனவே தேர்வுகள் துறை இயக்குனரகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் , ஒரு சில பள்ளிகளில் மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டு வந்துள்ளது.

    இதனால் மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கும், கட்டணம் செலுத்துவதற்கு மே மாதம் 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 1 மாணவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியை ஜனவரி 31-க்குள் மாணவர்களின் பட்டியலை தயாரிக்கும் பணியை முடிக்குமாறு மாவட்ட கல்வி அலுவலக அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    செய்தியாளர்:அ. மணிகண்டன்,
    விருதுநகர்
    Published by:Vijay R
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி