விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் மாவட்ட அளவிலான 2022ஆம் ஆண்டுக்கான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 70க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
திருத்தங்கல் தனியார் மண்டபத்தில் விருதுநகர் மாவட்ட பாடிபில்டர் சொசைட்டி மற்றும் பிரண்ட்ஸ் உடற்பயிற்சி கூடம் சார்பில் பிரண்ட்ஸ் ஜிம் கிளாசிக் 2022 ஆம் ஆண்டுக்கான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டம் முழுவதும் உள்ள 70க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக் காட்டினார்.
50-80 கிலோ எடை பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் வீரர்கள் தங்களது உடல் அசைவுகள், திறமைகளை வெளிக் காட்டினார். மேலும் ஒவ்வொரு எடை பிரிவிலும் தலா 6 பேர் வெற்றி பெற்றனர். அதேபோல் ஏழு பிரிவிலும் 42 பேர் பரிசு மற்றும் பதக்கங்களை வென்றனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பாராட்டு மட்டும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மாநில அளவிலான ஆணழகன் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாக விழா போட்டியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இப்போட்டியில் முதலிடம் பெற்று பரிசை வென்ற ஜிம் மாஸ்டர் ராஜா கூறியதாவது, மாவட்ட அளவில் நடைபெறும் ஆணழகன் போட்டியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறேன். மேலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்று உள்ளேன். இளைஞர்களும் வளரும் இளம் தலைமுறையினரும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.