Home /local-news /

மகா சிவராத்திரி-சதுரகிரிக்கு  செல்ல  பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

மகா சிவராத்திரி-சதுரகிரிக்கு  செல்ல  பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

மகா சிவராத்திரி-சதுரகிரிக்கு  செல்ல  பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

மகா சிவராத்திரி-சதுரகிரிக்கு  செல்ல  பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

மாசி மாத பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரியையொட்டி வருகிற 28-ம் தேதி முதல் மார்ச் 3ஆம் தேதி வரை வரை நான்கு நாட்கள் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...

    பக்தர்களுக்கு அனுமதி:-

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் மாசி மாத பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரியையொட்டி வரும் 28-ம் தேதி முதல் மார்ச் 3-ம் தேதி வரை நான்கு நாட்கள் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காலை 7-10மணி முதல் பக்தர்கள் மலையேறி கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் இரவில் தங்க தடை:-

    வரும் 28-ம் தேதி பிரதோஷத்தையொட்டி மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மாசி மாத பௌர்ணமி, மகா சிவராத்திரிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காய்ச்சல் மற்றும் சளி இருமல் உள்ள பக்தர்களுக்கும், 10 வயதுக்குட்பட்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கோயிலுக்கு வர அனுமதி இல்லை என்றும் முக கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும், இரவு நேரத்தில் பக்தர்கள் கோயிலில் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும் நீரோடைகளில் செல்லும் நீரில் குளிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
    Published by:Alagesan R
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி