விருதுநகர் மாவட்டத்தில்அருப்புக்கோட்டை- மானா
மதுரை இடையிலான மின் ரயில் பாதை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகவும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என வியாபாரிகள் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மானாமதுரை வரை 67 கிலோ மீட்டர் ரயில் பாதை மின் மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஆறு மாதங்களாக மின் பாதை அமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மின் மயமாக்கும் பணிகள் மந்த கதியில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இது குறித்து ரயில்வே நிர்வாகத்திடம் கேட்டபோது அடுத்த மாதத்திற்குள் மின்மமாக்கும் பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும் என்றும் அருப்புக்கோட்டை ஜவுளி தொழில் நகரம் என்பதால் ஜவுளி ஆடைகள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய ரயில் போக்குவரத்தை வியாபாரிகள் நம்பி வருகின்றனர். எனவே ரயில்வே நிர்வாகம் உடனடியாக அருப்புக்கோட்டை - மானாமதுரை இடையிலான மின்பாதை வழித்தடத்தை உடனடியாக பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வியாபாரிகள், வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.