Home /local-news /

கூலிங் பீர் குடிப்பதால் ஏற்படும்  ஆபத்து - இளைஞர்களே  உஷார்!!

கூலிங் பீர் குடிப்பதால் ஏற்படும்  ஆபத்து - இளைஞர்களே  உஷார்!!

கூலிங்

கூலிங் பீர் குடிப்பதால் ஏற்படும்  ஆபத்து-பெரும் அதிர்ச்சி தகவல் இளைஞர்கள் உஷார்

டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் வெயிலின் வெப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக கூலிங் பீர் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

    மாவட்டம் முழுவதும் அக்னி நட்சத்திர வெயில் மக்களை வாட்டி வரும் நிலையில் டாஸ்மார்க் கடைகளில் கூலிங் பீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. குடி மகன்களும் போட்டிபோட்டு கூலிங் பீரை வாங்கி செல்கின்றனர். கூலிங் பீர் அருந்துவதால் ஏற்படும் நன்மை தீமைகள் குறித்து விளக்குகிறது இது குறித்த செய்தி தொகுப்பு.

    விருதுநகர் மாவட்டம் முழுவதும் அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளதால் அதிக வெப்பத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். உடல் வெப்பத்தை தணிப்பதற்கு இளநீர், மோர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு வகையான பானங்களை அருந்தி வெப்பத்தை தனித்து வருகின்றனர்.

    அதேபோல மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் வெயிலின் வெப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக கூலிங் பீர் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இதனால் மாவட்டத்தில் பீர் விற்பனை சராசரி அளவை விட தற்போது அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    அதுபோல் சாதாரண நாட்களில் விற்பனை செய்யப்பட்ட பீர்கள் தற்போது இரு மடங்காக விற்பனையாகி வருவதாக டாஸ்மாக் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

    மேலும் குடிமகன்கள் கூலிங் பீரை கேட்டு வாங்கிச் செல்வதாகவும் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பீர் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

    மேலும் மாவட்டம் முழுவதும் டாஸ்மார்க் கடைகளில் கூலிங் பீர் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    கூலிங் பீர் அருந்துவதால் ஏற்படும் நன்மை தீமைகள் குறித்து விளக்குகிறார் மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.ஏ.போஸ், தற்போது இளம் தலைமுறையினர் கல்லூரி மாணவர்கள் பீர் அருந்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகவும் வேதனைக்குரியதாகும். பொதுவாக கோடைகாலங்களில் குளிர்ச்சியான பீர் ரகங்களில் குடிமகன்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

    குளிர்ச்சியான ஆல்கஹால் குறைவான பீரை குடிக்கும் போது தண்ணீர் தாகம் தணிவதோடு ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது. ஆனால் குளிர்ச்சியான பீரை அருந்துவதால் இளைஞர்கள் சிறுவயதிலேயே குடல் பெரிதாகி தொப்பை உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.

    அதேபோல் சிறுவயதிலேயே நரம்புத்தளர்ச்சி, மறதி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும் பீர் அருந்துவதால் சிறுநீர் கல் அடைப்பு சரியாகும் என்றும் கூறும் நடைமுறை மிக தவறானது. ஆல்கஹால் அருந்துவதால் அதிகப்படியான சிறுநீர் வெளியேறுவது வழக்கம் அப்போது வேண்டுமானால் சிறுநீரில் கல் வெளியாக வாய்ப்புள்ளது.

    ஆனால் மருத்துவ ரீதியாக பீர் அருந்துவதால் கல்லடைப்பு சரியாகும் என்று கூறுவது தவறான வாதமாகும். அதிகமான அளவு ஆல்கஹால் அருந்தினால் சிறுநீரகம் செயலிழக்கும் அபாயத்திற்கு வழிவகுக்கும். எனவே இளைஞர்கள் குளிர்ச்சியான பானங்களை அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்றார்.


    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Virudunagar

    அடுத்த செய்தி