Home /local-news /

மழையால் 50,000 நெல் மூட்டைகள் சேதம் - சகதியில் சிக்கிய லாரிகள்.!

மழையால் 50,000 நெல் மூட்டைகள் சேதம் - சகதியில் சிக்கிய லாரிகள்.!

தொடர்

தொடர் மழை எதிரொலி- நெல் மூட்டைகள் சேதம்-சேற்றில் சிக்கிக் கொள்ளும் லாரிகள்

Virudhunagar | நரிக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள , பல்வேறுல் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்.

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள , பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில்  சேதமடைந்து வருவதாகவும் நெல் மூட்டைகளை அப்புறப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

    நரிக்குடி, நாலூர்,பணக்குடி, வீரசோழன், பாப்பாங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்காலிக அரசு கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்படுகின்றன.

    தற்போது நரிக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் பெரும்பாலும் மழையில் சேதமடைந்து காணப்படுகின்றன. ஒருசில கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளில் நெல்மணிகள் முளைத்து வீணாகி போவதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொள்முதல் நிலையங்களில் லாரிகள் மூலம் நெல் மூட்டைகள் அரசு வாணிபக் கழகத்திற்கு கொண்டு செல்லும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் சேற்றில் சிக்கிக் கொள்வதால் தமிழ்நாடு அரசு வாணிப கழகத்தினர் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    இதுகுறித்து நம்மிடம் பேசிய இப்பகுதியை சேர்ந்த கிராம விவசாயிகள் கூறியதாவது, தொடர் மழை பெய்து வருவதால் கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து வருகின்றன. எனவே விவசாயிகளுக்கு பெரும் நட்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து அரசு வாணிப கழக கழக அதிகாரிகள் கூறியதாவது, நரிக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளை வாணிப கழக கிடங்கிற்கு கொண்டு செல்வதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். தொடர்ந்து மழை பெய்து வருவதால் லாரிகள் சேற்றில் சிக்கிக் கொள்வதால் நெல் மூட்டைகளை கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் உடனடியாக சிறிய சரக்கு வாகனங்கள் மூலம் நெல் மூட்டைகளை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி