விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாடைகட்டி, ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து, ஒப்பாரி, வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கேஸ் சிலிண்டரை தூக்கியும், ஆட்டோவை கயிறு கட்டி இழுத்தும், ஒப்பாரி வைத்து சங்கு ஊதி, நூதன போராட்டம் நடத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் மாரியப்பன் தலைமையில் மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மாற்றுத்திறனாளிகள் தலைவர் சரவணன், மற்றும் ஜனநாயக மாதர் சங்க தலைவி லீலா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர்: அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.