Home /local-news /

பெட்ரோல் டீசல் விலை உயர்வு... ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து சிபிஎம் நூதன போராட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வு... ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து சிபிஎம் நூதன போராட்டம்

ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து போராட்டம்

ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து போராட்டம்

Aruppukkottai : அருப்புக்கோட்டையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டம்.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்தும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து எதிர்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் அருப்புக்கோட்டையில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அகமுடையார் மஹால் பேருந்து நிறுத்தத்தில் இருந்து எம்.எஸ்.கார்ணர், திருச்சுழி ரோடு வழியாக மரக்கடை பேருந்து நிறுத்தம் வரை கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து வந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதனைத்தொடர்ந்து மரக்கடை பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச்செயலாளர் காத்தமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு நகர பொருப்பாளர் தமிழ்செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பிணர் தாமஸ் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சுமை தூக்கும் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
    Published by:Suresh V
    First published:

    Tags: CPM, Petrol Diesel Price, Petrol Diesel Price hike, Protest, Virudhunagar

    அடுத்த செய்தி