Home /local-news /

அருப்புக்கோட்டையில் பேக்கேஜ் டெண்டருக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு.!

அருப்புக்கோட்டையில் பேக்கேஜ் டெண்டருக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு.!

ஒன்றிய

ஒன்றிய கூட்டத்தில் பேக்கேஜ் டெண்டரை அனுமதிக்க கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு

Virudhunagar | விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் பேக்கேஜ் டெண்டரை அனுமதிக்ககூடாது என கவுன்சிலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் பேக்கேஜ் டெண்டரை அனுமதிக்ககூடாது என கவுன்சிலர்கள் வலியுறுத்தி உள்ளனர். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் சசிகலா பொன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய கவுன்சிலர் கோவிந்தசாமி 22,000 பேர் மக்கள் தொகை உள்ள பாளையம்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை. அதனால் தான் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர் என குற்றம் சாட்டினார்.மேலும் கிராம சபைக் கூட்டத்திற்கு கவுன்சிலர்களுக்கு எந்தவித அழைப்பும் இல்லை எனவும் தெரிவித்தார்.

    மேலும் பாளையம்பட்டியில் பன்றிகள் தொல்லை அதிகரித்து வருவதாகவும் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். அதற்கு பதிலளித்து பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் காஜாமைதீன் பந்தே நவாஸ் இது போன்ற பிரச்சனைகள் இனி வராதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பன்றிகள் வளர்ப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். சொந்த இடத்தில் மட்டுமே பன்றிகளை வளர்க்க வேண்டும், வீதிகளில் பன்றிகள் சுற்றி திரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    கூட்டத்தில் பேசிய கவுன்சிலர் சீனிவாசன் கவுன்சிலர்களுக்கு வழங்கப்படும் நிதி போதவில்லை. நீங்கள் கொடுக்கும் நிதியால் எந்த வசதியும் செய்ய முடியவில்லை. அதிமுக ஆட்சியில் அறிமுகம் செய்த பேக்கேஜ் டெண்டரை தற்போதும் செய்கிறார்கள் பேக்கேஜ் டெண்டர்முறை ரத்து செய்ய வேண்டும். அந்தந்த ஊராட்சி நிர்வாகங்களே பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என பேசினார்.

    இதற்கு பதிலளித்துப் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியகுமாரி இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்படும் என கூறினார். கூட்டத்தில் பேசிய கவுன்சிலர் பண்டாரசாமி கொரோனா முடிந்த பின்பும் சாலை, குழாய் வசதி போன்றவை செய்யப்படாமல் உள்ளது. அனைத்து அடிப்படை வசதிகளை உடனடியாக செய்ய வேண்டும் என பேசினார்.

    கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியகுமாரி கூறுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இல்லங்களில் ரூ 35,000 மதிப்பில் நவீன கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட உள்ளது அது குறித்து கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் திட்டத்தை கொண்டு செல்லலாம் என தெரிவித்தார். இவ்வாறு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Suresh V
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி