Home /local-news /

நூல் விலை உயர்வு கைத்தறி, கைத்தறி தொழில் முடக்கம்.!

நூல் விலை உயர்வு கைத்தறி, கைத்தறி தொழில் முடக்கம்.!

பஞ்சு

பஞ்சு நூல் விலை உயர்வு விசைத்தறி கைத்தறி தொழில் முடக்கம்- நெசவாளர்கள் குமுறல்

சந்தையில் நூல் விலை ஏற்றத்தால் நெசவாளர்கள் ஜவுளி உற்பத்தியில் ஈடுபட முடியாமல் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.

    பஞ்சு நூல் விலை உயர்வால் பாரம்பரியமான தொழிலான கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவு தொழில் முற்றிலுமாக முடங்கி நலிவடைந்து வருவதாக இத்தொழிலில் ஈடுபடும் நெசவாளர்கள் பெரும் வேதனை தெரிவித்து வருகின்றனர். நலிவடைந்து வரும் நெசவு தொழிலை மீட்டெடுக்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழர்களின் பாரம்பரியமான முக்கிய தொழிலான கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவுத் தொழிலில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் அதிக அளவு ஈடுபட்டு வருகின்றனர்.

    மின் இயந்திரங்கள் வருகையால் கைத்தறி நெசவு தொழில் காலப்போக்கில் முற்றிலுமாக மாறி தற்போது விசைத்தறி தொழிலுக்கு பெரும்பாலான நெசவாளர்கள் மாறி வருகின்றன. இந்நிலையில் நெசவு உற்பத்திக்கான மூலப்பொருளான நூல் விலை ஏற்றத்தால் விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

    சந்தையில் நூல் விலை ஏற்றத்தால் நெசவாளர்கள் ஜவுளி உற்பத்தியில் ஈடுபட முடியாமல் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். மேலும் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். கைத்தறி விசைத்தறி தொழில் முற்றிலுமாக முடங்கியுள்ளது.

    இதுகுறித்து நம்மிடம் பேசிய கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டு வரும் குடும்பத்தலைவி பொன் வடிவே கூறியதாவது, சமீபகாலமாக சந்தையில் நூல் விலை ஏற்றத்தால் நெசவுத் தொழில் முற்றிலுமாக நலிவடைந்து வருகிறது. மேலும் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகள் அனைத்தும் தேக்கம் அடைகின்றன. நூலின் விலை உயர்ந்தாலும் உற்பத்தி செய்யப்பட்ட சேலைகளின் விலை உயரவில்லை.

    இருந்தாலும் இத் தொழிலைத் தவிர வேறொரு மற்ற தொழில் தெரியாததால் இத்தொழிலை நம்பி ஈடுபட வேண்டியுள்ளது. எனவே நலிவடைந்து வரும் இத்தொழிலை மாவட்ட நிர்வாகம் மீட்டெடுக்க வேண்டும் என்றும் சந்தையில் விழுந்து வரும் நூலின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Virudunagar

    அடுத்த செய்தி