Home /local-news /

தொடர் மழை எதிரொலி.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை..

தொடர் மழை எதிரொலி.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை..

Sadhuragiri

Sadhuragiri

Sadhuragiri Sundaramahalingam Temple | விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில்  உலகப் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோயில் அமைந்துள்ளது.

    தொடர் மழை எதிரொலி காரணமாக விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி திருக்கோயிலுக்கு சித்திரை மாத பௌர்ணமி மற்றும் அமாவாசையொட்டி பக்தர்கள் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில்  உலகப் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத அமாவாசை மற்றும் பவுர்ணமி நாளில் பக்தர்கள் மலை ஏற அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பெளர்ணமியை முன்னிட்டுநாளை 14/04/2022 முதல் 17/04/2022 வரை 4 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள் என கோவில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

    அதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தற்போது தொடர் மழை பெய்து வருவதால் நாளை முதல் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தின் இப்புதிய அறிவிப்பால் உள்ளூர் வெளியூர் சிவ பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி