விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஒரு கையை ஊன்றி 30 நொடிகளில் 49 தண்டால் எடுத்து சாதனை படைத்த மாணவனுக்கு நோபிள் உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது. புதிய சாதனை படைத்த மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்பி.ஏ.சி. ராமசாமி ராஜா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் பயிலும் மாணவன் (21) விக்னேஷ். இவர் பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறார். தற்போது புதிதாக ஒரு சாதனை படைத்துள்ளார்.
ஒரு கையை ஊன்றி 30 வினாடிகளில் 49 முறை தண்டால் எடுத்து உலக சாதனை படைத்துள்ளார். இவரது சாதனை தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ஸ்ரீனிவாசன், யோகா மாஸ்டர் நாகராஜன் மற்றும் நோபிள் உலக சாதனை புத்தகம் சார்பில் டாக்டர் அரவிந்த், தீபக் குமார் ஆகியோர் முன்னிலையில் சாதனையை செய்து முடித்தார்.
சாதனை படைத்த மாணவருக்கு உலக சாதனையாளர் பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இவரது சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.