விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி 4, 5 ,6 வது வார்டு (
திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் மரம் வளர்ப்பது குறித்தும் வீட்டுக்கு ஒரு மரம் வளர்போம் திட்டத்தின் கீழ் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி பகுதியில் உள்ள 4 வது 5வது 6வது வார்டு பகுதிகளில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என தமிழக அரசு வலியுத்தி வந்த நிலையில் அதனை கடைப்பிடித்து கோடை காலத்தில் கத்திரி வெயில் இருந்த கார்த்துக் கொள்வேண்டும் என வலியுறுத்தினர். தற்போது இள தலைமுறையினர் மறைந்த சின்ன கலைவாணர் நடிகர் விவேக்கை நினைவூட்டும் வகையில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என வற்புறுத்தி திமுக நகரமன்ற உறுப்பினர்கள் ஜோதி முருகன் (4வது வார்டு ) ஞானபிரபா ( 5 வது வார்டு)மணி முருகன் (6வது வார்டு) வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் நாட்டு வளம் காப்போம் திட்டத்தின் கீழ் வார்டு பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வேலி அமைத்து மரக்கன்று நட்டு பேணி பராமரித்து வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு வீடு வீடாக சென்று நகர்மன்ற உறுப்பினர்கள் பொதுமக்களிடம் மரம் வளர்ப்பு குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்தி வருகின்றனர். கவுன்சிலர்கள் மரக்கன்று நட்டு மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.