Home /local-news /

தேரா? 108 ஆம்புலன்ஸா? - திருச்சுழி தேரோட்டத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

தேரா? 108 ஆம்புலன்ஸா? - திருச்சுழி தேரோட்டத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

தேரா? 108 ஆம்புலன்ஸா ? திருச்சுழி தேராட்டத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

தேரா? 108 ஆம்புலன்ஸா ? திருச்சுழி தேராட்டத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

திருத்தேரோட்ட நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு இருந்தனர்.

    திருச்சுழி ஸ்ரீ பூமிநாத சுவாமி கோயில் பங்குனித் திருவிழா தேரோட்டத்தின் போது அவசரமாக வந்த ஆம்புலன்சுக்கு பக்தர்கள் உடனடியாக வழி விட்ட சம்பவம் நெகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் பூமிநாதர் திருக்கோயில் திருத்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.கோயிலின் நான்கு ரத முக்கிய வீதிகள் வழியாக திருத்தேர் பக்தர்களால் இழுத்து வரப்பட்டது. திருத்தேரோட்ட நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது மேற்கு ரத வீதி வழியாக திருத்தேர் கோயிலை நோக்கி வந்தபோது பக்தர்கள் அருப்புக்கோட்டை நரிக்குடி சாலையில் இருபுறமும் கூட்டமாக குழுமியிருந்தனர். அப்போது அவ்வழியாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று ஒலி எழுப்பியவாறு வந்து கொண்டிருந்தது.

    இதைத் பார்த்த பக்தர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு வழி விட்டனர். மேலும் ஆம்புலன்சில் செல்லும் நபருக்கு பக்தர்கள் வேண்டிக் கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தேரோட்டத்தில் பக்தர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு வழி விட்ட வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    செய்தியாளர்:அ.மணிகண்டன்,
    விருதுநகர்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி